க்ரோக்ஸ் காலணிகள் குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் பிரபலமான ஃபேஷனாக மாறிவிட்டன. Crocs மிகவும் வசதியானவை, லைட்ட்வெய்ட்டானவை, மற்றும் நீர்ப்புகாமையாக இருக்கின்றன. அதனால் பனி அல்லது மழை காலத்திலும் குழந்தைகள் எளிதாக அணிய முடிகிறது. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் கால்களுக்கு Crocs காலணிகள் நல்லதா கெட்டதா என்ற கேள்வி எழுகிறது.
அதாவது, இந்த வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால், முதுகுதண்டு பிரச்சனை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கிராக்ஸ் வகை காலணிகள் Croslite என்ற இலகுவான பொருளால் உருவாக்கப்படுகிறது. இதில் சரியான கிரிப் கிடைக்காததால் இதுபோன்ற பிரச்சனைகள் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மெரிலாந்து மாநிலம் சில்வர் ஸ்ப்ரிங்கைச் சேர்ந்த பாத நிபுணரும், அமெரிக்க பாட்டியாட்ரிக் மெடிக்கல் அஸோசியேஷனின் பேச்சாளருமான ப்ரியா பார்த்தசாரதி கூறியதாவது, சில சந்தர்ப்பங்களில், அதாவது நீச்சல் குளம் மற்றும் கடற்கரை போன்ற இடங்களில் Crocs மிகச் சிறந்த தேர்வாக இருக்கலாம், “வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சிக்கும்போது குரோக்ஸ் ஒரு வரம் என்று கூறுகிறார். ஏனென்றால், என் மூன்று வயது குழந்தை தானாகவே அதை அணிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் பல குழந்தைகள் மற்றும் டீனேஜர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு பாதநல மருத்துவரான அவர், நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் க்ரோக்ஸ் அணிவதால் வரும் பிரச்சினைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதாவது, குதிகால் வலி, வளைவு பகுதியில் வலி, சில சமயங்களில் ஹாமர்டோ (hammertoes) போன்ற கட்டமைப்பு சிக்கல்களை நான் கண்டிருக்கிறேன். ஏனெனில் Crocs காலணிகள் காலில் இருந்து விழாமல் பிடித்து வைத்திருக்க விரல்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்; அதனால்தான் இந்த சிக்கல்கள் ஏற்படுகின்றனர் என்று கூறினார், எனவே, Crocs காலணிகள் தினமும், முழுநேரமும் அணிவதற்கு சிறந்த தேர்வாக இருக்காது என்ற கருத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Crocs மற்றும் அவற்றின் புதிய வகைகள் (knockoffs) போதிய நிலைத்தன்மையுடன் இல்லாதது ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. அவை குதிகால் பட்டையுடன்(heel strap) வந்தாலும், நிறைய குழந்தைகள் அதைப் புறக்கணித்து, சறுக்குகளைப் (slides) போல காலணிகளை அணிவார்கள். காலணிகளுக்கு வளைவு ஆதரவும் இல்லை என்றும், அவை ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சுவதில்லை என்றும், இது காலப்போக்கில் கொப்புளங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், Crocs பரப்பாக இருக்கும் காரணமாக அவை காலில் உறுதியாக பிடிக்க முடியாமல், சில நேரங்களில் வழுக்கி விழுந்து, காலில் காயங்களுடன் குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதையும் சுட்டிக்காட்டிய ப்ரியா, ஸ்நீக்கர் போன்றவற்றை ஒப்பிடுகையில், Crocs காலுக்கு மிகவும் நெருக்கமாக பிடிக்கவில்லை என்கிறார்.
NPR-க்கு கொடுத்த ஒரு அறிக்கையில், கிரோக்ஸ் (Crocs) கூறியதாவது, தங்கள் தயாரிப்பு காலணிகள் தினசரி அணிவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், “எளிதில் அணிந்து கழற்றக்கூடிய வகையிலான இந்த வடிவமைப்பு குழந்தைகளுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. எங்கள் தயாரிப்புகளை அணிவதால் ஏற்பட்ட எந்தவொரு நம்பகமான உடல் நலக் குறைபாடுகளும் எங்களுக்கு தெரியவில்லை” என்று கூறியது.