உஷார்!. ஹேர் டையில் ஆபத்தான ரசாயனங்கள்!. உச்சந்தலையை பாதிக்கும் அபாயம்!.

Hair Dye 11zon

ஹேர் கலரிங் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஹேர் கலரிங் செய்துகொள்கிறார்கள். சிலருக்கு ஹேர் கலரிங் செய்துகொள்ள ஆசை இருந்தாலும் அதனால் தலைமுடிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்ற குழப்பங்கள் இருக்கின்றன. ஆம், நீங்கள் பயன்படுத்தும் ஹேர் டை உங்கள் உச்சந்தலையை ரகசியமாக சேதப்படுத்தும் ஆபத்து அதிகமாக உள்ளது. இது உங்கள் தலை ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும்.


பொதுவாக விற்பனை செய்யப்படும் ஹேர் கலர்கள் நிலையான (Permanent) மற்றும் அரைவழி நிலையான (Semi-permanent) வகைகள், கடுமையான ரசாயனங்களை கொண்டிருக்கும். அதாவது, அம்மோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பாராஃபெனிலெனெடியமைன் (PPD) போன்ற கடுமையான இரசாயனங்களைக் கொண்டுள்ளன. தோல் பாதுகாப்பு இல்லாமல் கலர் செய்வது, பக்கவிளைவுகளை உருவாக்கும் அபாயம் அதிகம். இவை வறட்சி மற்றும் அரிப்பு முதல் முழுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் அல்லது ரசாயன தீக்காயங்கள் வரை பல்வேறு உச்சந்தலைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இந்த இரசாயனங்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுவது உங்கள் உச்சந்தலையின் இயற்கையான தடையை சீர்குலைத்து, அதன் பாதுகாப்பு எண்ணெய்களை அகற்றிவிடும். காலப்போக்கில், இது நாள்பட்ட வறட்சி, வீக்கம் மற்றும் அதிகரித்த முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

எச்சரிக்கை அறிகுறிகள்: முடிக்கு கலர் செய்த பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்குத் தெரிகிறதா? கலர் வைத்த சில மணி நேரம் மற்றும் நாட்களுக்கு பிறகு தோலில் எரியும், அரிக்கும் உணர்வு ஏற்படலாம். கலர் காரணமாக தோல் உலர்ந்து, சிறு சிறு துகள்களாக உரிந்து விழும் நிலை ஏற்படலாம். அதாவது பொடுகு மற்றும் பொடுகுபோன்ற தோல் உரிதல் ஏற்படலாம். முடியை கழுவும் போது அல்லது சீவும்போது வலி ஏற்படும். முடி வேர்கள் பலவீனமடைந்து உதிர்தல் அதிகரிக்கும்.

பாதுகாப்பாக ஹேர் டை பயன்படுத்த வழிகள்: ஹேர் கலரிங் செய்துகொள்ளும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

கண்டிப்பாக பேட்ச் டெஸ்ட் எடுத்த பின்புதான் ஹேர் கலரிங் செய்ய வேண்டும். சிலருக்கு ஹென்னா ஹேர் கலரிங் கூட ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி போன்ற பிரச்னைகள் வரலாம். அவர்களுக்கு சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலே அழகுதான் என்று விட்டு விட வேண்டியது அவசியம்.

மேலே கூறப்பட்ட நான்கு விதமான ஹேர்டைகளில் மெட்டாலிக் ஹேர் டை அவ்வளவாக நல்லதில்லை. மீதி மூன்றில் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அனிலைன் ஹேர் கலரிங்தான் நிறைய பேர் விரும்பி செய்துகொள்கிறார்கள்.

பியூட்டி பார்லருக்கு சென்று அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு நமது தலைமுடிக்கும் உடல் நிலைக்கும் ஏற்ற மாதிரியான ஹேர் கலரிங் எது என்று அவர்களிடம் டிஸ்கஸ் செய்து பின்பு நமக்கான ஹேர் கலரிங் செய்துகொள்ளலாம். பொதுவாக ஹேர் கலரிங் செய்துகொள்பவர்களுக்கு தனியாக ஷாம்பு, கண்டிஷனர் என்று இருக்கிறது. அதை சரியாக உபயோகிக்க வேண்டும் இதனால் தலைமுடி உதிர்தல் பிரச்னை வராமல் இருக்கும். தலைமுடியின் நிறம் வெளுத்துப் போகாமல் இருக்கும்.

Readmore: ஏங்ங்ங்கக.. கூமாபட்டிக்கு போவாதீங்க..!! அலர்ட் செய்த அரசு.. Reels பார்த்து சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

KOKILA

Next Post

பாமக, பாஜக இடம் பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இருக்காது..!! - திருமாவளவன் திட்டவட்டம்

Fri Jun 27 , 2025
2026 தேர்தலில் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் […]
thirumavalavan 1

You May Like