ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து பணம் கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இந்தச் சூழலில், இதுபோன்ற வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் அல்லது சலுகைகள் குறித்து அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, ஈரான் அரசு சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டுமே இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அல்லது பிற நோக்கங்களுக்காக ஈரானுக்கு விசா இல்லாத நுழைவை உறுதியளிக்கும் எந்தவொரு முகவரும் குற்றக் கும்பல்களுடன் உடந்தையாக இருக்கலாம். எனவே, இதுபோன்ற சலுகைகளுக்கு இரையாக வேண்டாம் என்று இந்திய குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Readmore: இரட்டிப்பு பலன் தரும் புரட்டாசி முதல் சனிக்கிழமை!. இதெல்லாம் செய்ய மறக்காதீங்க!