ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 […]

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]

ஜூன் 22 அன்று, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, ​​அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான நிடாஞ்ச், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவை B-2 குண்டுவீச்சு விமானங்களால் தாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் ஏவுகணைகளால் குறிவைத்தது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகளால் அமெரிக்க தளம் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதம் […]

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் ஏவுகணையை ஏவியதை அடுத்து இஸ்ரேலின் பீர் ஷேவாவில் 3 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். முழுமையான போர் நிறுத்தம் சில மணி நேரங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். “அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் […]

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் அதனை மறுத்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 24 மணி நேரத்திற்குள் ஒரு கட்டப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இருப்பினும், ஈரான் அந்தக் கூற்றை மறுத்து, தாங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், போர் நிறுத்தத்திற்கான […]

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]

கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு […]