தெரு நாய் கடிக்கு பலியாகும் உயிர்கள்..! சாலையில் செல்லும்போது இதை செய்யாதீர்கள்!… தற்காத்துக் கொள்வது எப்படி.!

சமீப காலங்களில் தெருநாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் சமீபத்தில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த தெருநாய்கள் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை, அவை தாக்கும்பட்சத்தில், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்றவை பற்றி இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

ஓநாய் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சியில் மாற்றம் அடைந்தவையே நாய்கள். ஓநாய்களைப் போலவே அவை வேட்டையாடும், கூட்டமாகச் செயல்படும். அந்த நாய் கூட்டத்தில் ஆல்பா ஆண் அல்லது ஆல்பா பெண் என்று சொல்லக்கூடிய தலைவன் அல்லது தலைவி, கூட்டத்துக்குத் தலைமை தாங்கும். ஒரு நாய் ஒருவரை துரத்திக் கடிக்கும்போது கூட்டத்தில் இருக்கும் அனைத்து நாய்களும் ஓடிப்போய் காரணமின்றிக் கடிக்கும். இது இயற்கையாகவே இவற்றின் மரபணுவில் கலந்த ஒரு செயல்.

தெருநாய்களின் இந்த மாற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கமும், நகரங்களில் இடமின்மையும் முக்கிய காரணம். முன்பெல்லாம் நாய்களுக்கென்று நிறைய இடங்கள் இருந்தன. பெரும்பாலும் கிராமப்புறங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ தொலைவாகவோதான் இருக்கும். ஒரு நிகழ்வின்போது சாப்பாட்டுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். அவை கிராமங்களில் Scavengers என்று சொல்லும்படி, குப்பைகளில் தெருக்களில் கிடைக்கும் உணவுகளையே உண்ணும். ஆனால், நகர்ப்புறங்களில் இடமின்மை, மக்கள் தொகை காரணமாக குடியிருப்புகள் கட்டடங்கள் அதிகமானதால் நாய்கள் தெருவில் குவிய ஆரம்பித்தன. அவற்றுக்கென இடங்கள் இல்லாமல் போயின. இதனால் மனிதனர்களுடன் நெருங்கி இருக்கும் வகையில் நாய்கள் தெருவில் தள்ளப்பட்டுள்ளன.

நாய்கள் திடீரென ஒருவரை கடிக்காது. நாய்கள் கடிப்பதற்கு பொதுவான சில காரணங்கள் உள்ளன: முதலில் நீங்கள் ஒரு தெருநாயை பார்த்தால், முதலில் அமைதியை கடைபிடியுங்கள். நாய்கள் என்பது மனிதர்களின் பயத்தை உணரும் உயிரினங்கள், உங்கள் பயம் தெரு நாய்களை மேலும் ஆக்ரோஷமாக மாற்றக்கூடும். நேரடி கண் தொடர்பு தவிர்க்கப்பட வேண்டும். நாயைப் பார்ப்பதற்குப் பதிலாக, உங்கள் தலையை குனிந்த படியே நாயை விரட்ட முயற்சிக்கவும். உங்களுக்கும் நாய்க்கும் இடையில் ஒரு தடையை உருவாக்க, ஒரு பேக் அல்லது எந்தவொரு பொருளையும் பயன்படுத்தவும்.

தெரு நாய்கள் அறிமுகம் இல்லாதவர்களை ஒருபோதும் நம்பாது. பொதுவாக, அறிமுகமில்லாதவர்களையே (Strangers) தெரு நாய்கள் கடிக்கும். குடை அல்லது குச்சி போன்ற ஒரு பொருள் அருகில் இருந்தால், அதை உங்களுக்கும் நாய்க்கும் இடையே ஒரு பாதுகாப்புத் தடையாகப் பயன்படுத்தவும். இனப்பெருக்கக் காலத்தின்போது நிறைய நாய்கள் ஒரு பெண் நாய்க்காக சண்டையிட்டுக்கொள்ளும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு நாயும் மிகவும் முரட்டுத் தனத்தோடுகூடிய கோபத்தில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் நாய்களை அணுகும்போது கடிக்க வாய்ப்புள்ளது.

ஒரு பகுதியில் வாழும் நாய்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அதன் எல்லையாகக் கருதிக்கொள்ளும். அப்படி இருக்கும் சமயத்தில் அந்த எல்லைக்குள் யாராவது முகம் தெரியாத மூன்றாம் நபர் வந்தால் அவர்களைக் கடிக்க வாய்ப்பு உள்ளது. இது தனது எல்லையைப் பாதுகாப்பதற்காகக் கடிப்பது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் பத்து நாள் வரைதான் உயிரோடு இருக்கும். பிறகு இறந்துவிடும். நாயால் கடிக்கப்பட்ட ஒருவர் அதை கண்காணிக்க வேண்டும். ஒருவேளை அந்த நாய் பத்து நாளுக்குள் இறந்துவிட்டால் ரேபிஸால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று அர்த்தம். அச்சமயத்தில் Anti Rabies vaccine மற்றும் Anti rabies immunoglobulin போட்டுக்கொள்வது நல்லது. இது நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

இரண்டாவதாக நாய் துரத்தும்போது ஓடக் கூடாது. திரும்பி நின்று சத்தம் போட்டு மிரட்ட வேண்டும். அப்படி மிரட்டும்போது நாய்கள் திரும்பிப் போக வாய்ப்பிருக்கிறது. இன்னும் வேகமாக ஓடினால் வேகமாக நம்மை துரத்திப் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒரு தெரு நாய் உங்களை அணுகினால், நாயின் கவனத்தை உங்களிடமிருந்து விலக்க நீங்கள் உணவை கொடுத்து அதை திசைதிருப்பலாம். உணவை உங்களிடமிருந்து தூக்கி எறியுங்கள், அதனால் நீங்கள் பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிச் செல்லும்போது நாய் அதில் கவனம் செலுத்த முடியும்.

Kokila

Next Post

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!! இலவச மின்சாரம் குறித்து மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Oct 26 , 2023
தமிழ்நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன. இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இலவச மின்சார திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 40 ஆயிரம் சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசின் அறிவிப்பைப் பொறுத்து இந்த விவசாய இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், 3 […]

You May Like