UPI பயனர்களே.. பேலன்ஸ் சரிபார்ப்புகள் மற்றும் ஆட்டோபே முறையில் அதிரடி மாற்றம்..!! ஆகஸ்ட் 1 முதல் அமல்..

UPI

ஆகஸ்ட் 1 முதல் UPI -இல் புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், யூபிஐ பயனர்களின் பல வசதிகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இருப்பு சரிபார்ப்பு, தானியங்கி கட்டணம் மற்றும் பரிவர்த்தனை நிலை சரிபார்ப்பு போன்ற சேவைகளைப் பாதிக்கும்.


தேசிய கட்டணக் கழகம் (NPCI) வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, UPI பயன்பாட்டை அதிகம் சுமை ஏற்படாமல், தடைபாடுகளின்றி செயல்படச் செய்யும் நோக்கத்தில், முக்கியமான 10 API செயல்களை கட்டுப்படுத்தும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் UPI சேவையில் தடை ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயற்படுத்தப்படுகிறது.

எந்தெந்த API-க்கள் கட்டுப்பாட்டுக்கு வரப்போகின்றன?

* கணக்கு இருப்பு விசாரணை (Balance Enquiry)

* பரிவர்த்தனை நிலைச் சோதனை (Transaction Status Check)

* தானாக கட்டணம் செலுத்தும் பண்புகள் (Autopay Mandate Execution)

NPCI சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

Balance Enquiries: ஒரு UPI பயன்பாட்டு செயலியில் ஒரு பயனாளருக்கு 1 நாளில் 50 முறை மட்டுமே கணக்கு இருப்பு பார்க்க அனுமதி. ஒரே நபர் Paytm, PhonePe போன்ற பல Apps-ல் பயன்படுத்தினாலும், ஒவ்வொன்றிலும் 50 முறை வரை அனுமதி.

Linked Account Queries: தினமும் 25 முறை வரை மட்டுமே, பயனரின் தெளிவான ஒப்புதல் இருந்தால் மட்டுமே அனுமதி.

Autopay Mandate Execution: பிக் ஹவர்களில் (காலை 10 மணி – மதியம் 1 மணி, மாலை 5 மணி – இரவு 9:30 மணி) தானாக கட்டணம் செலுத்தும் நடவடிக்கைகள் நடைபெறாது. ஒவ்வொரு முறையும் 1 முயற்சி + 3 மறு முயற்சிகள் மட்டுமே அனுமதி.

Transaction Status Check: பரிவர்த்தனை ஒப்புதலுக்குப் பிறகு குறைந்தது 90 விநாடிகள் கழித்து தான் நிலைச் சோதனை அனுமதி. ஒரே பரிவர்த்தனையில் 2 மணி நேரத்திற்குள் 3 முறை மட்டும் சோதனை செய்யலாம்.

Non-User Initiated API Calls: பிக் ஹவர்களில் (காலை 10-1, மாலை 5-9:30) பயனாளர் தொடங்காத API அழைப்புகள் தடை செய்யப்படும்.

ஆகஸ்ட் 31, 2025-க்குள் அனைத்து வங்கிகள் மற்றும் பேமெண்ட் சேவை வழங்குநர்களும் தங்கள் API அழைப்புகளை சரியாக கட்டுப்படுத்துகிறோம் என உறுதி கூறி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். CERT-In அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப தணிக்கை நிறுவனங்கள் மூலம் ஆண்டு தோறும் முறைப்படி கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் UPI பயன்பாட்டின் வேகம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அதிக பயனாளர்கள் பயன்படுத்தும் நேரங்களில் சேவையில் தடை ஏற்படாமல் பாதுகாக்கும் முயற்சி இது. பயனாளர்கள், குறிப்பாக அதிகமாக பயன்படுத்தும் நபர்கள், இம்மாற்றங்களை உணர்ந்து, தங்களின் நடவடிக்கையை சீரமைக்க வேண்டிய தேவை இருக்கலாம். எனினும், மொத்தமாக பார்க்கும்போது, இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை சூழலுக்கு இது நன்மை தரும் முக்கிய முயற்சி என NPCI அறிவித்துள்ளது.

Read more: Gold Rate: மளமளவென சரிந்த தங்கத்தின் விலை.. ஒரு கிராம் கோல்டு எவ்வளவுனு பாருங்க..!! 

Next Post

BREAKING | திமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்கிறார் கமல்ஹாசன்..!! வைகோவுக்கு இடமில்லை..!!

Wed May 28 , 2025
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வில்சன் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் மாநிலங்களவைக்கு செல்கின்றனர். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் […]
Kamalhaasan 2025

You May Like