இன்று காலை 10 மணி முதல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

Job 2025 3

தருமபுரி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது..


இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், இன்று காலை 10:00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.11,000 நிதியுதவி..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Fri Nov 21 , 2025
மத்திய அரசு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நலனுக்காக ஒரு சிறப்பு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டம் தான், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், மிஷன் சக்தியின் ஒரு பகுதியாக, 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் […]
Money 2025

You May Like