அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்சமயம் நெஞ்சு வடியும் காரணமாக மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இன்னும் ஒரு சில தினங்களில் அலருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்னதாக ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்த போது அவரை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் எடுத்து விசாரிக்க அமலாக துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுமதியை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில், தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன்வைத்திருக்கிறார். அதாவது இன்னும் ஒரு தினங்களில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது இத்தகைய நிலையில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அவரது உடல் நிலை மேலும் மோசமாகலாம். அதேபோல உடல் நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதம் செய்யப்பட்டது இருதரப்பு மதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் வருகின்ற 23ஆம் தேதி வரையில் எட்டு நாட்கள் அவரை அமலாக்கத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கியிருக்கிறார். அதை சமயம் மருத்துவமனையில் வைத்து விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.