பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்..‌ 5 நாளில் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்…! இந்திய தேர்தல் ஆணையம்

Untitled design 5 6 jpg 1

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோரல் அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்டது. தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் ஆகஸ்ட் 27 காலை 10.00 மணி நிலவரப்படி இவர்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) மூலமாக மட்டுமே 53 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் வரப்பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

நேரடியாக 1,78,948 உரிமை கோரல் அல்லது ஆட்சேபங்கள் பெறப்பட்டன. இவற்றில் 20,702 நேர்வுகள் 7 நாட்களுக்கு பின் பைசல் செய்யப்பட்டன. 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 6,35,124 படிவங்கள் கிடைக்கப் பெற்றதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் 27,825 பைசல் செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2025 ஆகஸ்ட் 01 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் நகல் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத காரணங்கள் தெரிவித்து அந்தப் பட்டியல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் தேடும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களின், இணையதளங்களில் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உரிமை கோரல்களை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

இரண்டரை வயது குழந்தையை பெற்ற தந்தையே..!! ஆலையில் வீசிய துர்நாற்றம்..!! எந்திரத்தின் கீழ் கிடந்த சாக்கு மூட்டை..!! விருதுநகரில் அதிர்ச்சி..!!

Thu Aug 28 , 2025
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாண்டி செல்வம், ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி வனிதா (24). இந்த தம்பதியினருக்கு பார்கவி என்ற இரண்டரை வயது குழந்தை இருந்தது. சமீபக் காலமாக கணவன் – மனைவி இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, வனிதா கணவரிடம் இருந்து பிரிந்து, […]
Virudhunagar 2025

You May Like