தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
2-ம் நாளான இன்று கரூர் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் தவெக அனுமதி கேட்டது முதல் கரூர் துயரத்திற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரை விரிவாக விளக்கம் அளித்தார்.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர். இதனால் இன்று சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நடந்த்து..
ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால் அதிமுகவினர் அனைவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. அதிமுகவை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்..
இந்த நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.. குறிப்பாக வட இந்திய ஊடகங்கள் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வந்தன.. ஆனால் இது வெறும் வதந்தி என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது..
அந்த பதிவில் “ தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி ! தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.
இது முற்றிலும் வதந்தியே. “அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை ” என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : கரூர் துயர வழக்கு.. தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு..!