கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக நேற்று அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக நேற்று அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் 52 புதிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர், இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களும் அடங்குவர். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை அவரது தொகுதியான ஷிகான் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.
மாநிலத்தில் உள்ள மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பெயர்களை இறுதி செய்ய பாஜகவின் தேர்தல் குழு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் கூடியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, இரண்டாவது பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார். மற்ற முக்கிய பாஜக தலைவர்கள் ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் கோவிந்த் எம் கார்ஜோல் ஆகியோர் முறையே கோகாக் மற்றும் முதோல் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
இந்த பட்டியலை டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜகவின் கர்நாடக தேர்தல் பொறுப்பு மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் கர்நாடக பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோர் மற்ற தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். இந்தப் பட்டியலில் 52 புதிய முகங்களும், ஓபிசி பிரிவில் இருந்து 32 பேரும், பட்டியல் சாதியைச் சேர்ந்த 30 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 16 பேரும் உள்ளனர் .