அடுத்த 3 நாட்கள் தொடர் கனமழை…! இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையா இருங்க…!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

அச்சம்... தமிழகத்தில் பறவை காய்ச்சல்...! இதை எல்லாம் வாங்க தடை...! ஆட்சியர் அதிரடி நடவடிக்கை...!

Sat Nov 5 , 2022
பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனம், தீவன மூலப்பொருட்கள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள மாநிலம்‌ ஆலப்புழா மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி. ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தாக்குதல்‌ எதுவும்‌ இல்லை. பறவைக்காய்ச்சல்‌ […]

You May Like