கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்ற நபர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் புகார் மனு ஒன்றை வழங்கி இருந்தார் அதில் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு தமிழக சிபிசிஐடி காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற நுண்ணறிவு உளவு பிரிவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி தன்னிடமிருந்து 35 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் வழங்கியிருந்தார்.
இதன் பிறகு இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், செங்கோட்டை நகர பாஜகவின் முன்னாள் செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன் தனக்கு காவல் உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்று தெரிவித்து பணம் பெற்று மோசடி செய்தது உறுதியான நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.