மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக..? எங்கு தெரியுமா..? வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம்..!!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மேகாலயாவில் 85%, நாகாலாந்தில் 84% வாக்குகள் பதிவாகின.


இந்நிலையில் திரிபுராவில் பாஜக கூட்டணி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை பாஜக 40 இடங்களிலும், சிபிஎஸ் கூட்டணி 6 இடங்களிலும், திமோக 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற போதிலும் பாஜக கூடுதலான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால், அங்கு பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகிறது.

CHELLA

Next Post

லியோ அப்டேட்..!! கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் விஜய்..!! மகளாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்..!!

Thu Mar 2 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியாகிய தகவல் தற்போது உறுதியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் விஜய்-த்ரிஷா ஆகிய இருவரும் கணவன்-மனைவியாக நடிக்கும் நிலையில், அவர்களின் மகளாக […]
WhatsApp Image 2023 03 02 at 9.47.45 AM

You May Like