பூத் கமிட்டி ஆய்வின் போது பாஜக தொண்டர் சொன்ன தகவலால் நயினார் நாகேந்திரன் அதிர்ந்து போனார்..
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெற உள்ளது.. இப்போதே முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் இந்த தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுக உடன் கூட்டணியையும் இறுதி செய்துள்ளனர்.
மேலும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பூத் கமிட்டியை அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் விருதுநகரில் உள்ள ரோல்சல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே பூத் கமிட்டி கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வுக்கு சென்றார்..
அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர் ஒருவர் “ நீங்கள் தேர்தலில் நில்லுங்க.. சோறு கூட போடுறோம்.. ஆனால் ஓட்டுப் போட மாட்டாம் என எல்லாரும் சொல்றாங்க..” என்று நயினார் நாகேந்திரனிடம் சொன்னார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த நயினார், அவரை சொல்ல வேண்டாம் என்று சைகை செய்கிறார்.. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள் அதை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறி அந்த தொண்டரை அனுப்பி வைத்தனர்..
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. மேலும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் என்றும், யதார்த்த கள நிலவரம் இது தான் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்..
Read More : #Flash : திமுக எம்.பி நீக்கம்.. அதிரடி அறிவிப்பு.. திருமணம் குறித்த சர்ச்சை பேச்சு எதிரொலி..