புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூரில் மகரிஷி வித்யாலயா பள்ளிக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தாமரைக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியின் மின்னஞ்சலில் நேற்று காலை 9 மணிக்கு பள்ளியிலும், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் வீட்டிலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் எஸ்.வி. சேகர் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளது சரியா வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளிக்கு வந்து மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அதே நேரத்தில் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரின் வீட்டிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இரு இடங்களிலும் வெடிபொருள்கள் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. அதேபோல, தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நீதிமன்ற வளாகங்கள் உட்பட்ட, இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.



