டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இன்று பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே தீப்பிழம்புடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக நெரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்..
செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.. இந்த குண்டுவெடிப்பில் 3 அல்லது 4 வாகனங்களும் தீப்பிடித்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.. இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.. நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால், பல மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்தன. அருகிலுள்ள கட்டிடங்கள் முழுவதும் சத்தம் கேட்டது.
சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், இருப்பினும் சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.. எனினும் இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சூழலில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால், இது பயங்கரவாதிகளின் நாசவேலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. மேலும் டெல்லியில் அதிகபட்ச பாதுகாப்பு உஷார் நிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
Read More : ‘என் தொண்டையை அறுத்துக்கோங்க, ஆனா..’: SIR-ஐ தேர்தல் ஆணையம் திரும்பப் பெற மம்தா வலியுறுத்தல்..!



