தமிழ்நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண்களின் திருமணச் செலவுகளுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்ட ‘அண்ணன் சீர்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் (1 சவரன்) தங்க நாணயம் மற்றும் ஒரு உயர்தர பட்டுப்புடவை ஆகியவை சீர்வரிசையாக முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல்களை வழங்கி சமூக நலத்துறை தற்போது அரசாணையைப் பிறப்பித்துள்ளது. தமிழக பெண்களின் சுபநிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கில் வகுக்கப்பட்ட இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாகச் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மணப்பெண்களுக்கு ‘அண்ணன் சீர்’ வழங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் பலன்களைப் பெறப் பொதுமக்கள் நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், இணையவழியில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இதற்கன பிரத்யேக அதிகாரப்பூர்வ இணையதளம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
Read More : வடகிழக்கு பருவமழை எதிரொலி..!! சென்னையில் உச்ச அலெர்ட்..!! அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!


