Breaking : 84.29 % வாக்குப்பதிவு.. சட்டமன்ற தேர்தலில் வரலாறு படைத்த தமிழ்நாடு..! மாவட்ட வாரியான விவரம் இதோ..!

tamilnadu voting election

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. இன்று காலை முதலே  பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்..


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.. காலை முதலே வாக்கு சதவீதம் அதிகமாக பதிவானது.. அதன்படி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 84.29 சதவீத வாக்குகள் பதிவானது.. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.78% வாக்குகள் பதிவாகி உள்ளன..

சேலத்தில் 90.13 % வாக்குகளும், தருமபுரியில் 89.78% வாக்குகளும், ஈரோட்டில் 89.78% வாக்குகளும், நாமக்கல்லில் 89.46% வாக்குகளும் பதிவாகி உள்ளன.. சென்னையில் 83.03% வாக்குகள் பதிவாகி உள்ளது.. தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.41 % வாக்குகள் பதிவாகி உள்ளன..

மாவட்ட வாரியான வாக்கு சதவீத விவரம்

அரியலூர் – 85.16%
செங்கல்பட்டு – 84.09%
சென்னை – 83.03%
கோவை – 84.35%
கடலூர் – 84.45%
தருமபுரி – 89.77%
திண்டுக்கல் – 88.18%
ஈரோடு – 89.67%
கள்ளக்குறிச்சி – 86.74%
காஞ்சிபுரம் – 86.70%
கன்னியாகுமரி – 75.35%
கரூர் – 91.78
கிருஷ்ணகிரி – 84.58%
மதுரை – 80.07%
மயிலாடுதுறை – 80.79%
நாமக்கல் – 89.39%
நாகை – 85.32%
பெரம்பலூர் – 85.06%
புதுக்கோடை – 83.24%
ராமநாதபுரம் – 76.10%
ராணிப்பேட்டை – 88.45%
சேலம் – 90.09%
திருநெல்வேலி – 77.37%
விருதுநகர் – 84.03%
விழுப்புரம் – 87.56%
வேலூர் – 87.56%
திருவண்ணாமலை 87.90%
திருப்பூர் 88.16%
திருப்பத்தூர் – 87.49%
திருச்சி – 84.94%
தூத்துக்குடி – 73.63%
திருவாரூர் – 82.70%
திருவள்ளூர் – 82.71%
தேனி – 80.72%
நீலகிரி – 78.29%
தஞ்சாவூர் – 80.02%
தென்காசி – 81.33%
சிவகங்கை – 76.01%

தமிழ்நாட்டில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர்.. இதில் இன்று 4,83,29,573 வாக்குகள் பதிவானது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் 4.62 கோடி வாக்குகள் பதிவானது.. கடந்த சட்டமன்ற தேர்தலை விட சுமார் 20 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன..

RUPA

You May Like