Breaking : காலையிலேயே ஷாக்..! வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.9,000 உயர்வு..! தங்கம் விலை நிலவரம் என்ன?

gold silver

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ரூ. 254க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து ரூ. 2,54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : பயணிகளுக்கு ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் டிக்கெட் விலை உயர்வு அமல்! எவ்வளவு தெரியுமா?

RUPA

Next Post

பிரமிட் நடைப்பயிற்சி பற்றி தெரியுமா? இது பிடிவாதமான கொழுப்பை கூட உடனடியாக கரைக்கும்..!

Fri Dec 26 , 2025
தினமும் நடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், வழக்கமான நடைப்பயணத்துடன் ஒப்பிடும்போது, ​​’பிரமிட் நடைப்பயிற்சி’ எனப்படும் ஒரு புதிய முறை தற்போது உடற்பயிற்சி உலகில் பெரும் பிரபலமடைந்து வருகிறது. இந்த முறையில் நடப்பது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பிடிவாதமான வயிற்று கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. இந்த பிரமிட் நடைப்பயணம் என்றால் என்ன? அதன் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.. பிரமிட் நடைப்பயணம் என்றால் […]
Walking Routine

You May Like