நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்..
திரைக்கதை எழுதுவதில் மன்னன் என பெயர் பெற்ற பாக்யராஜ் பல வெற்றி படங்களை இயக்கி நடித்திருந்தார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்..
தனது குரு பாரதிராஜா காலமான 2 வாரத்திலேயே பாக்யராஜ் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்த பாக்யராஜ் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read More : தமிழே தெரியாத ஒருவருக்கு டெல்லியின் சிறப்பு பிரதிநிதி பதவியா..? விஜய் அரசை விளாசிய அதிமுக ஐடி விங்..!



