நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொன்னுசாமி மறைவு செய்தி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
Read More : தமிழ்நாடு காவல்துறையில் 3,640 + காலியிடங்கள்..!! வெளியானது ஹால் டிக்கெட்..!! டவுன்லோடு செய்வது எப்படி..?



