சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.. தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. தமிழ்நாட்டின் நிதி வருவாய் கடன் குறித்த விபரங்கல் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்..
இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் மாநில அரசின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்டது.. மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் மட்டும் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.. வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட அதிகளவில் அதிகரித்துள்ளது.. உள்நாட்டு உற்பத்தி 2.25 சதவீதத்தில் இருந்து 2.25 சதவீதமாக சரிந்துள்ளது.. தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.. 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட இந்த 5 ஆண்டுகளில் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது. இந்த கடன் அன்றாட செலவுகளை சமாளிக்க பெறப்பட்டுள்ளது “ என்று தெரிவித்தார்..
Read More : Flash : அதிமுகவில் இருந்து விலகினார் Ex. அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.. “மனவலியோடு விலகுகிறேன்..” என உருக்கம்..!



