Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்வு.. வெள்ளி விலையும் புதிய உச்சம்..!

Jewels 2

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 84,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


கிட்டத்தட்ட 1 மாதமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. வார இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது.. இந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் தங்கம் விலை ரூ.84,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. எனினும் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்தது..

இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.10,550க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 84,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த 2 நாட்களில் ரூ.1040 வரை தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 உயர்ந்து, ரூ.153க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,53,000 விற்பனையாகிறது.

Read More : மோசடியில் சிக்காதீர்கள்!. இறந்த நபரின் ஆதார் எண்ணை செயலிழக்கச் செய்வது எப்படி?. புதிய வசதி அறிமுகம்!. எளிய வழி இதோ!.

English Summary

Gold prices today rose by Rs. 320 per sovereign and are being sold at Rs. 84,400.

RUPA

Next Post

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு.. 385 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..?

Fri Sep 26 , 2025
Job opportunities in the Rural Development Department.. 385 vacancies.. How to apply..?
job 2

You May Like