#Breaking : 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.77,000ஐ நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..

gold jewelry reflective surface 640852 1749

கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தது.. ஆனால் தற்போது தங்கம் விலை உயர்ந்து வருகிறது..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்த நிலையில் இன்று ரூ.640 உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.9,620-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.640உயர்ந்து, ரூ..76,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.. கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து, ரூ.134-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,34,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

"இதுக்காக தான் ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்.." லிஸ்ட் போட்டு சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

Sat Aug 30 , 2025
தனது ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.. அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8-ம் தேதி நாடு திரும்புகிறேன்.. தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் […]
cm stalin foriegn trip

You May Like