Breaking : யுகாதி நாளில் குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.2,160 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.10,000 சரிவு..!

gold jewelery

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.14,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 10 குறைந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.10,000 குறைந்து வெள்ளி ரூ. 2.65 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : அலர்ட்..! ஏப்ரல் 1 முதல் பான் கார்டுக்கு கடுமையான விதிகள் வரப்போகுது..!

RUPA

Next Post

ஈரான் தொடர்ந்து கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் அதை செய்யக் கூட தயங்க மாட்டேன்.. டிரம்ப் எச்சரிக்கை..!

Thu Mar 19 , 2026
மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர இராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் […]
donald trump

You May Like