அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் C,D பிரிவு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தகுதி உள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் பெறுவார்கள்.. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது..
பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தனித்தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.. நுகர்ப்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்.. வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.. மின் வாரிய ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..