அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த இன்று காலை மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கி.மீ-ஆக குறைந்தது.. பின்னர் இந்த வேகம் மேலும் குறைந்து, வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மணிக்கு 3 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது..
இந்த புயல் எதிரொலியாக தமிழகத்தில் இன்று முதல் சில இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி , செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதே போல் விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்… கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



