Breaking : அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால்.. புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு..! CM விஜய் அதிரடி..!

cm vijay money

அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்து புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மகத்தான வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்..


முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.. தொடர்ந்து நேற்று 9 அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பதவியேற்றுக் கொண்டனர்..

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடியாக் அறிவித்தார்.. இதையடுத்து விஜய் தலைமையிலான தவெக அரசு, லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்து புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் “ எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்.. புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

பொதுமக்க 180 425 1555 (24×7) என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுங்க.. அன்புமணி வலியுறுத்தல்..!

English Summary

The Tamil Nadu government has announced that a reward of ₹1 lakh will be given to anyone who files a complaint if a government employee demands a bribe.

RUPA

Next Post

Karuppu Box Office Day 5: பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் கருப்பு.. 5 நாள் வசூல் இவ்வளவா?

Tue May 19 , 2026
Karuppu Box Office Day 5: Surya-Tisha Krishnan’s film to enter Rs 150 crore club
karuppu 1 1

You May Like