Breaking : மனுவை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்..! ஜனநாயகன் வழக்கு தள்ளுபடி..! அடுத்து என்ன?

jananayagan high court

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நீதிமன்றத்தை நாடியது.


இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.

எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதனால் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.. தயாரிப்பு தரப்பு இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது..

இதனிடையே ஜனநாயகன் பட வழக்கில், உடனே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது… வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், முறையான வாய்ப்பு அளித்து தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.. இதனால் மீண்டும் தனி நீதிபதி அமர்வில் ஜனநாயகன் பட வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரும் விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.. தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் திரைப்படத்தை மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி உள்ளது…

இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய மனுவை வாபஸ் பெறுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.. படத் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியது.. மனு திரும்ப பெறப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..

ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு இன்னும் ஒரு வாரத்தில் அப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.. இந்த மாத இறுதியில் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

Read More : 8வது சம்பள கமிஷன் குறித்த முக்கிய அறிவிப்பு..! ஊழியர்களின் சம்பளமும் வாழ்க்கையும் ஒரே அடியாக மாறுமா?

RUPA

Next Post

பறவைக் காய்ச்சல்.. ஹாஃப் பாயில் சாப்பிட வேண்டாம்.. அமைச்சர் மா.சு. எச்சரிக்கை..!

Tue Feb 10 , 2026
பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த சூழலில் சென்னையில் காகங்கள் […]
Bird Flu 2025

You May Like