Breaking : கரூர் பெருந்துயரம்.. விஜய் 3-வது முறையாக சிபிஐ சம்மன்.. நாளை ஆஜராக உத்தரவு..!

vijay cbi

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.


விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையில், 7 மணி நேரம் தாமதமானது ஏன்? கூட்ட நெரிசல் பற்றி தெரியாதா உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்.. எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறை தான், போலீசாரின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே வாகனத்தை இயக்கியதாகவும் விஜய் கூறியிருந்தார்..

அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சதி நடந்திருப்பதாகவும், சிபிஐ தான் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று விஜய் கூறியிருந்தார்.. மேலும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.. ஒருவேளை விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டால் அது விஜய்க்கு பெரும் பின்னடைவாக இருக்கும்..

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை விஜய் ஆஜரான நிலையில் தற்போது சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.. அதன்படி நாளை விஜய் மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தில் 3-வது முறையாக விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. நாளை விஜய் ஆஜராவாரா? அல்லது வேறு தேதி கோருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது..

Read More : உடல்நலத்திற்கு நல்லது என்று செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கிறீங்களா? இந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அது விஷம்…!

RUPA

Next Post

NDA கூட்டணியில் சேர விஜய்க்கு பாஜக நெருக்கடி..? பவன் கல்யாண் மூலம் துணை முதல்வர் பதவி ஆஃபர்..! ஆனால் நயினார் இப்படி சொல்றாரே..!

Mon Mar 9 , 2026
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை […]
Vijay Pawan kalyan

You May Like