Breaking : எம்.ஜி.ஆர் அதிமுக..! புதிய கட்சியை அறிவித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்..!

panruti ramachandran

தமிழ்நாட்டின் பழம்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்தவர்.. அதிமுக பிளவுக்கு பின் ஓபிஎஸ்-ன் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தார்..


இந்த நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஒருபுறம் அடையாள அரசியல் ஒருபுறம் கொள்கை அரசியல் சூறாவளி போல் அடித்துள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் புதிய கட்சியை தொடங்கி உள்ளேன்.

வரும் 23-ம் தேதி காஞ்சிபுரத்தில் கட்சியின் அறிமுக விழா நடைபெறும்.. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை.. தேர்தலில் இந்த இயக்கம் போட்டியிடாது.. ஒருவேளை இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட நினைத்தால், அவர்கள் சுயேட்சையாக நிற்கலாம்..

நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயக்கம். ஒரு உன்னத சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிக்கல் தான் இந்த இயக்கம்.. இந்த இயக்கம் என்னோடு நின்றுவிடாது.. எம்.ஜி.ஆர்., அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி உள்ளோம்.. இந்த இயக்கத்தை தொடங்குவது நானாக இருந்தாலும், இதை தொடர்ந்து நடத்துவது மக்களாக இருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதிகள்..! ஏப்ரல் 1 முதல் விதிகள் முற்றிலும் மாறும்..!

Thu Feb 19 , 2026
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பெரிய அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.. இந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் புதிய வருமான வரி விதிகளால் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஏப்ரல் 1 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும். வருமான வரித் துறை புதிய வருமான வரி விதிகள் 2026 ஐக் கொண்டுவரும், வருமான வரி விதிகள் 1962 இல் மாற்றங்கள் செய்யப்படும். இது தொடர்பான வரைவு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. புதிய வருமான […]
credit card

You May Like