பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகிய பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் புதிய கட்சியை தொடங்கிய போது அதன் பெயரில் திராவிட அண்ணா பெயர்கள் இல்லாததால் அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்..
பின்னர் மேடைகளில் திராவிட கொள்கைகளை பற்றி பேசி வந்த அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்தார்.. சமீபத்தில் திமுக சார்பில் சென்னையில் திமுக 75 – அறிவுத்திருவிழா நடந்தது.. இதில் திமுக பேச்சாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நாஞ்சில் சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை..
நாஞ்சில் சம்பத் கடந்த சில நாட்களாகவே விஜய்யின் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்ததாலேயே அவருக்கு அறிவுத்திருவிழாவில் பேச அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் திமுகவின் அறிவுத்திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது தனக்கு வருத்தம் தெரிவித்தார்.. 2026 தேர்தலில் திமுகவுக்கு தவெக தான் சவாலாக இருக்கும் என்றும் அதிமுக சவாலாக இருக்கும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது..
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.. மதிமுக, அதிமுக, திமுகவை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பத் இணைந்தார்.. அவர் தவெகவில் இணைந்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..!! – அண்ணாமலை



