fbpx

1.6 கோடி பேரன்கள்!… ஆயிரக்கணக்கான பெண்களுடன் உடலுறவு கொண்ட மங்கோலிய அரசர்!… மர்மம் நிறைந்த மரணம்!… நடுங்க வைக்கும் பின்னணி!

உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் மங்கோலிய அரசர் செங்கிஸ்கானின் நடுங்க வைக்கும் வரலாற்று பின்னணி குறித்து பார்க்கலாம்.

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தார். பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின் தலையை துண்டித்து, மலையாக குவித்த செங்கிஸ்கான், நகரங்களை சூறையாடியபடியே, பீஜிங் முதல் மாஸ்கோ வரை பல நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

ஒரு காலத்தில் மூன்று கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்த மங்கோலியப் பேரரசின் தற்போதைய எல்லைக்குள் வசிப்பவர்களின் மொத்தத் தொகையே மூன்று கோடிதான். கிழக்கு மங்கோலியா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே 2003ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் ஏறத்தாழ எட்டு சதவிகித ஆண்களின் ‘ஒய்’ குரோமோசோம்களில் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்பத்தின் தடயங்கள் உள்ளதாகத் தெரியவந்தது. உலகில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ஆண்கள் அதாவது உலக ஆண்களில் 0.5% செங்கிஸ்கானின் பரம்பரையினர் என்று கூறுகிறது இந்த ஆராய்ச்சியின் முடிவுகள்.

பாகிஸ்தானில் ஹஜாரா பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் மக்களின் மரபணுக்களிலும் இதுபோன்ற தடயங்கள் தென்படுகின்றன. அந்த மக்களும் தாங்கள் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றே தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இதைத் தவிர, முகல், சுக்தாய் மற்றும் மிர்ஸா போன்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட மக்கள் தாங்களும் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களாக கூறுகின்றனர்.

செங்கிஸ்கானுக்கு 6 மனைவிகள் இருந்தனர். ஆனால் உடலுறவு என்பது எவ்வித தடையும் இல்லாமல் எண்ணற்ற பெண்களுடன் தொடர்ந்தது. உலக மக்கள் தொகையில் 0.5% செங்கிஸ்கான் பங்களிப்பில் இருந்து வந்தது. ஒவ்வொரு பகுதியையும் கைப்பற்றும் போது 3 அடிக்கு உயரமான எல்லா ஆண்களையும் கொலை செய்ய உத்தரவிடுவார். பெண்களில் பலரைத் தேர்ந்தெடுத்து உடலுறவு கொள்வார்.

கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கான், ரஷ்யா, சீனா, ஈராக், கொரியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பகுதிகளை வென்றார். ஆயிரக்கணகான பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறைந்தது 1000 பெண்கள் கருவுற காரணமாக இருந்திருக்கிறார். இதையடுத்து செங்கிஸ்கான் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது கல்லறை இருக்கும் இடம் இன்றும் அறியப்படாத மர்மமாகவே இருக்கிறது.

Kokila

Next Post

11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..! 18ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்..!

Sun Oct 15 , 2023
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அக்டோபர் 18ஆம் தேதி வரை புயல் சுழற்சி காரணமாக கன முதல் மிதமான மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், திருச்சூர், […]

You May Like