சீனாவின் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 1 கி.மீ. தொலைவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது. சீனாவின் நிங்போ-ஜூஷான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, யாங் மிங் மரைன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஒய்எம் மொபிலிட்டி சரக்குக் கப்பலில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்துள்ளன.
இந்த நிலையில், இன்று (ஆக. 9) பிற்பகல் 1:40 மணியளவில், அந்த சரக்குக் கப்பலில் எதிர்பாராத விதமாக, திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த சரக்குகள் வீசி எறியப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், துறைமுகத்தில் இருந்த ஓர் அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களும், உணவு விடுதி ஒன்றின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், சுமார் 1 கி.மீ. தொலைவு வரையில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Read more ; ஷாக்..!! சென்னை சாலையில் இத்தனை பிரச்னைகள் இருக்கா? வெளியான ரிப்போர்ட்!! அதிகாரிகள் என்ன சொல்லுறாங்க?