fbpx

திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் காசோலை…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…! எப்படி விண்ணப்பிப்பது…?

சமூக நலத்துறையின் சார்பில், திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் 2023- 24 ஆம் ஆண்டுக்கு மாநில அளவிலான ஒரு திருநங்கை நபருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது.

சமூக நலத்துறையின் சார்பில், திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கு திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ம் தேதி அன்று மாநில அளவிலான ஒரு திருநங்கை நபருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும். திருநங்கையர் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் சாதனைகளை, நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். திருநங்கைகள் முன்மாதிரி விருதுக்கு ரூ.1,00,000/- க்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படும். மேற்காணும் தகுதிகள் உடைய திருநங்கையர்கள் 05.02.2024 மாலை 5.45 க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அதிகரிக்கும் COVID... மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவு...!

Mon Jan 1 , 2024
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங்; கொரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. […]
BF.7 கொரோனா ஒருவரிடம் இருந்து இத்தனை பேருக்கு பரவுமா..? அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்..!!

You May Like