fbpx

“வெந்நீர் சொம்பை தட்டிவிட்ட….”! துடிதுடித்த 1 வயது பிஞ்சு! மணப்பாறை அருகே சோகம்!

மணப்பாறை அருகே 1 வயது ஆண் குழந்தை வெந்நீர் கொட்டியதால் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணப்பாறை அருகே உள்ள எண் பெருமாள் பட்டியைச் சார்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் முகின் ராவ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இளையராஜாவின் மனைவி மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சில நாட்கள் தங்கி வருவதற்காக சென்றிருக்கிறார். கடந்த 28ஆம் தேதி தனது தந்தை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார் இளையராஜாவின் மனைவி. அப்போது உலையிலிருந்து வெந்நீரை ஒரு செம்பில் எடுத்து வைத்திருக்கிறார் .

எதிர்பாராத விதமாக சிறுவன் முகின்ராவ் அந்தச் செம்பை தட்டி விட்டதாக தெரிகிறது. இதனால் செம்பில் இருந்த சூடான வெந்நீர் சிறுவனின் இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதிகளில் கவிழ்ந்ததால் அந்தப் பகுதிகள் வெந்து வலியால் துடித்திருக்கிறான் சிறுவன். இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் உறவினர்கள். பின்னர் அந்த மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான் சிறுவன் முகின்ராவ். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் இறந்த சம்பவத்தினால் அவனது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Rupa

Next Post

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களாவுக்குள் சுவர் ஏறி குதித்த இளைஞர்கள்..!! திக் திக் நிமிடங்கள்..!! நடந்தது என்ன?

Fri Mar 3 , 2023
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை அவரது பங்களாவுக்குள் இரண்டு இளைஞர்கள் சுவர் ஏறி குதித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அந்த இரு இளைஞர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாந்த்ரா மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஷாருக்கானின் பங்களாவுக்குள் (மன்னத்) அத்துமீறி சுவர் ஏறி குதித்து உள்ளே 2 இளைஞர்களை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து போலீசில் […]

You May Like