fbpx

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…! நாடு முழுவதும் இன்று முதல் 21-ம் தேதி வரை…! மத்திய அரசு அட்டகாசமான அறிவிப்பு…! ‌‌‌‌

நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் மற்றும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான பொருட்களைக் காட்சிப்படுத்தும் பிரத்தியேக நிகழ்ச்சியான ‘திவ்ய கலா மேளா’வை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று முதல் 21-ம் தேதி வரை நடத்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நடத்த உள்ளது.

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளின் கைவினை, கலைப் பொருட்கள், உணவு உள்ளிட்டவை இதில் காட்சிப்படுத்தப்படும். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 150 மாற்றுத்திறனாளி கலைஞர்களும், கைவினைக் கலைஞர்களும், தொழில்முனைவோரும் தங்களது திறன்களையும், பொருட்களையும் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்துவார்கள்.

வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடைகள், எழுது பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள், உணவு மற்றும் இயற்கை சார்ந்த தயாரிப்புகள் விளையாட்டு சாதனங்கள் மற்றும் அன்பளிப்புகள், அணிகலன்கள், கைப்பைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெறும். உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கும், மாற்றுத்திறனாளி கலைஞர்களின் தயாரிப்புகளைப் பெற்று, அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு.

Vignesh

Next Post

11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை...! இந்திய உணவு கழகம் தகவல்...! ‌

Sun Mar 12 , 2023
இந்திய உணவுக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 5-வது ஏலத்தில் 11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாராந்திர அளவில் மின்னணு ஏலங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய உணவுக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட 5-வது மின்னணு ஏலத்தில் நாடு முழுவதிலும் உள்ள 23 பிராந்தியங்களில் இருக்கின்ற 657 பண்டகச்சாலையில் […]

You May Like