பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இண்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இருந்தாலும், பல நபர்களின் வாழ்க்கையில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பணம் திரும்பப் பெறுதல் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற பணிகளுக்கு நேரடியாக வங்கிக்கு செல்வது அவசியமாகிறது.. எனவே வங்கி தொடர்பான எந்தவொரு முக்கியமான பணிகளையும் முடிக்க வேண்டும் எனில், பிப்ரவரி மாதத்தின் முழு விடுமுறை பட்டியலை தெரிந்துகொள்ள வேண்டும்..
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 10 வங்கி விடுமுறைகள் உள்ளன. இதில் மகா சிவராத்திரி போன்ற திருவிழாக்களும், வழக்கமான வார இறுதி நாட்களும் அடங்கும்.
பிப்ரவரி மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்களில் முழு பட்டியல்:
- பிப்ரவரி 5, 2023 – ஞாயிற்றுக்கிழமை – (இந்தியா முழுவதும்)
- பிப்ரவரி 11, 2023 – இரண்டாவது சனிக்கிழமை – (இந்தியா முழுவதும்)
- பிப்ரவரி 12, 2023 – ஞாயிற்றுக்கிழமை – (இந்தியா முழுவதும்)
- பிப்ரவரி 15, 2023 – லூயி-நங்காய்-நி- (ஹைதராபாத்)
- பிப்ரவரி 18, 2023 – மகா சிவராத்திரி – (அகமதாபாத், பெலாபூர், பெங்களூரு, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபரம்)
- பிப்ரவரி 19, 2023 – ஞாயிற்றுக்கிழமை – (இந்தியா முழுவதும்)
- பிப்ரவரி 20, 2023 – மாநில நாள் – (ஐசாவால் – மிசோரம்)
- பிப்ரவரி 21, 2023 – லோசார் – (கேங்டோக் – சிக்கிம் )
- பிப்ரவரி 25, 2023 – மூன்றாவது சனிக்கிழமை – (இந்தியா முழுவதும்)
- பிப்ரவரி 26, 2023 – ஞாயிற்றுக்கிழமை – (இந்தியா முழுவதும்)
எனினும் வங்கி விடுமுறை நாட்களில் இண்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங், மற்றும் பணப் பரிமாற்றங்களுக்கான யுபிஐ ஆகியவை வழக்கம் போல் செயல்படும்..