fbpx

கோர விபத்தில் 10 பேர் பலி!. ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக செல்லும்போது நிகழ்ந்த சோகம்!

Accident: உத்தர பிரதேசத்தில் வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாதில் இருந்து சரக்கு வேன் ஒன்றில் தொழிலாளர்கள் சிலர், ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக அலிகார் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று காலை, மீரட் நெடுஞ்சாலையில் சலேம்பூர் பகுதியில் அந்த வேன் சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர். போலீசார் கூறுகையில், ‘விபத்தில் காயம் அடைந்தவர்களில் ஒன்பது பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பலியானவர்களில் இருவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை’ என்றனர்.

Readmore: அமெரிக்க விபத்தில் தமிழர்கள் பலி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!. சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்!.

English Summary

UP Bulandshahr Bus Accident: Nearly 10 killed, 27 injured after pickup van collides with bus

Kokila

Next Post

தாய்ப்பாலில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிப்பு!. அதன் விலை எவ்வளவு தெரியுமா?

Mon Aug 19 , 2024
Making ice cream from breast milk! Do you know how much it costs?

You May Like