பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நாட்களில் விண்ணப்பம் செய்யாதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் 30, 31 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் மாதம் 27 முதல் ஜூலை மாதம் 4-ம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.