ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜகாடியா தொழிற்சாலை பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சிறுமி வழக்கம் போல் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஜய் பஸ்வான், சிறுமி தனியாக விளையாடுவதை கவனித்துள்ளார். சிறுமியுடன் யாரும் இல்லாததை உறுதி செய்த விஜய், சிறுமியை புதருக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விஜய், சிறுமியின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி, வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு யாரும் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் விஜய் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், தனது மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில், குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இதே சிறுமியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தான் பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜய் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். மேலும், விஜய் பஸ்வானின் அந்த சிறுமியின் தந்தையும் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். விஜய்க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: வெளிநாடுகளில் தீவிர ஆய்வு.. அந்த அளவிற்கு முருங்கைக்கீரையில் என்ன இருக்கு தெரியுமா..?