வெறும் 5 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடிய அதிவேக சார்ஜரை Redmi நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது..
ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட இந்த நவீன யுகத்தில், வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜர்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், Realme நிறுவனம் 240W சார்ஜரை அறிமுகம் செய்தது.. இது 9.5 நிமிடங்களில் 4,600mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் Redmi நிறுவனம், 5 நிமிடங்களுக்குள் உங்கள் மொபைலை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய புதிய சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சார்ஜர் உங்கள் ஸ்மார்ட்போனை 5 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் என்று உறுதியளித்துள்ளது. 300W இம்மார்டல் செகண்ட் சார்ஜர் (Immortal Second Charger) என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் Redmi நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இருப்பினும், சார்ஜரின் தொழில்நுட்ப அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பான வீடியோவை Redmi வெளியிட்டுள்ளது. அதில் சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜருடன் இணைக்கப்பட்ட Redmi Note 12 ஸ்மார்ட்போன், 43 வினாடிகளில் ஒரு சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படுவதை பார்க்க முடிகிறது.. 2 நிமிடங்களில் 50 சதவீதம் வரையிலும், 5 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகிறது என்பதை காட்டுகிறது..
எனினும் Redmi Note 12 பதிப்பு தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது.. இது தான் அந்நிறுவனத்தின் அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த அதிவேக சார்ஜரின் அடாப்டர் Double GaN தொழில்நுட்பத்துடன் வருகிறது. 50 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பாதுகாப்புகளை கொண்டுள்ளது என்று Redmi நிறுவனம் தெரிவித்துள்ளது.