fbpx

100 நாள் வேலை திட்டம்.. கூலி விகிதம் உயர்வு.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

2023-24 நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கூலி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு அறிவித்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்‌ தேசிய அளவில்‌ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திறன்சாரா உடல்‌ உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுடைய வயது வந்தோரை கொண்ட குடும்பம்‌ ஒன்றிற்கு அதிகபட்சமாக ஆண்டு ஒன்றிற்கு 100 நாள்கள்‌ வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 1 மணி நேர உணவு இடைவெளியுடன்‌ கூடிய 8 மணி நேரம்‌ வேலை செய்ய வேண்டும்‌. இவ்வேலைக்கான தினசரி ஊதியம்‌ ரூ.281/- எனவும்‌ இருப்பினும்‌ அவரவர்‌ செய்யும்‌ வேலையின் அளவிற்கேற்ப ஊதியம்‌ வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2023-24 நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கூலி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு அறிவித்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA), 2005 இன் பிரிவு 6 (1) இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.. இந்த புதிய அறிவிப்பின் மூலம், ஹரியானாவில் அதிகபட்ச தினசரி ஊதியம் ரூ.357 ஆகவும், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் குறைந்தபட்சமாக ரூ.221 ஆகவும் இருக்கும். ரூ. 7 முதல் ரூ.26 வரையிலான ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி ராஜஸ்தானின் திருத்தப்பட்ட ஊதியம் ஒரு நாளைக்கு 255 ரூபாயாக உள்ளது, இது 2022-23 இல் 231 ரூபாயாக இருந்தது. ராஜஸ்தான் மாநிலம் அதிகபட்ச ஊதிய உயர்வு பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டில், பீகார் மற்றும் ஜார்கண்டில் ஊரக வேலை தொழிலாளியின் தினசரி ஊதியம் ரூ. 210 ஆக இருந்தது. அது இப்போது ரூ. 228 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் கடந்த ஆண்டை விட சுமார் எட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளன. சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம், மிகக் குறைந்த தினசரி ஊதியம் ரூ. 221, கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23ல் இரு மாநிலங்களும் தினசரி ஊதியம் ரூ.204 ஆக இருந்தது. எனினும் கர்நாடகா, கோவா, மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் குறைந்த சதவீத உயர்வை பதிவு செய்துள்ளன.

Maha

Next Post

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை கட்டுப்படுத்தும் தூதுவளை! கற்பூரவள்ளி!... மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

Mon Mar 27 , 2023
கொரோனாவிற்குப் பின்பு வேகமாக பரவிவரும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை தடுக்க தூதுவளை மற்றும் கற்பூரவள்ளி இலைகள் பெரிதும் பயன்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் அதிலிருந்து இதுவரை மீண்டுவந்தபாடியில்லை. இந்தநிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. இந்தநிலையில், இன்ஃப்ளூயன்சா ரக காய்ச்சல் தற்போது பரவிவருகிறது. காய்ச்சல், இருமல், உடல் வலி, மூக்கில் நீர் […]

You May Like