fbpx

செக்..! 100 நாள் வேலை திட்டம்… வருகை பதிவை உடனே மொபைல் மூலம் கண்காணிப்பு முறை…! மத்திய அரசு அதிரடி

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் வருகைப்பதிவை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து பணிகளிலும் (தனிப்பட்ட பயனாளிகள் பணிகள் தவிர) இத்திட்டத்தின தொழிலாளர்களின் வருகைப்பதிவை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பயனாளிகள் தங்களது குறைகளை அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வகையும் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, இத்திட்டத்தின் கீழ் முறையான சமூக தணிக்கையை மேற்கொள்வது, குறைதீர்ப்பாளரிடம் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், இத்திட்டத்திற்கான கைபேசி செயலியில் தங்களது குறைகளை பதிவு செய்ய ஏதுவாக “உங்களது குறைகளை தெரிவியுங்கள்” என்ற புதிய விருப்பத்தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மொபைல் செயலியின் பயன்பாடு தற்போது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. இந்தச் செயலியின் மூலம் வருகைப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. 2023-24 நிதியாண்டில், 29.11.2024 நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25.68 கோடியாக இருந்தது, நடப்பு ஆண்டில், இந்த எண்ணிக்கை 2024-25 நிதியாண்டில் 29.11.2024 நிலவரப்படி 25.17 கோடியாக உள்ளது, இது மகாத்மா காந்தி என்.ஆர்.இ.ஜி.எஸ் என்பது தேவை உந்துதல் ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும் மற்றும் சட்டத்தின் பத்தி 2, அட்டவணை II, கிராமப் பஞ்சாயத்து, தான் பொருத்தமெனக் கருதும் விசாரணையை மேற்கொண்ட பிறகு, அத்தகைய விண்ணப்பத் தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் வேலை அட்டையை வழங்குவது கிராமப் பஞ்சாயத்தின் கடமையாகும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

English Summary

100-day work plan… Instant attendance tracking via mobile

Vignesh

Next Post

தினமும் 5 காளான் போதும்.. புற்று நோய் முதல் இதய நோய் வரை வராமல் தடுக்க முடியும்...

Wed Dec 11 , 2024
health benefits of eating mushroom

You May Like