fbpx

மகிழ்ச்சி…! இன்று 100 பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களுக்கு விடுமுறை…!

இன்று ஒருநாள் மட்டும் 100 சார் பதிவாளர் அலுவலங்களுக்கு செயல்டுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை வழங்கி பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக 14-ம் தேதி முதல் 16 வரை தொடர் அரசு விடுமுறை. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் 25-ம் தேதி அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்பட்டுள்ளது.

எனவே, மேலே குறிப்பிட்டுள்ளபடி 17-ம் தேதி வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில் இன்று செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு ஒருநாள் மட்டும் செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தை மாதத்தின் முதல் வேலை நாளான வரும் 20-ம் தேதி அன்று சுபமுகூர்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று, 20-ம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

100 Deeds Registry offices to remain closed today

Vignesh

Next Post

பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு திருமணம்!. பெண் எம்பியை மணக்கிறார்!. யார் அந்த பிரியா சரோஜ்?

Sat Jan 18 , 2025
Famous cricketer Rinku Singh is getting married! He is marrying a female MP! Who is Priya Saroj?

You May Like