கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இதனால், தீபாவளிக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். தகுதி இருந்தும் ரூ.1,000 வழங்கவில்லை என குமுறிய சுமார் 9 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. தகுதியான பெண்கள் எத்தனை பேர்? தீபாவளிக்கு முன் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தலாமா? மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கலாமா? என ஆலோசிக்கப்பட இருக்கிறது.