fbpx

போர்களமாக காட்சியளிக்கும் கள்ளக்குறிச்சி..! பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு..!

கள்ளக்குறிச்சியில் பிளஸ்2 மாணவி மரண விவகாரத்தில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பேருந்துகளுக்கு தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

போர்களமாக காட்சியளிக்கும் கள்ளக்குறிச்சி..! பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு..!

இந்த பரபரப்பான சூழலில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், பேரிகார்டுகளை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் தீவைக்கப்பட்டது.

போர்களமாக காட்சியளிக்கும் கள்ளக்குறிச்சி..! பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு..!

பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதுபோல் சென்று, மீண்டும் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்துகின்றனர். கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறை தரப்பில் பலர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

Chella

Next Post

’குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’..! பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்..! முதல்வர் முக.ஸ்டாலின் வேண்டுகோள்

Sun Jul 17 , 2022
கனியாமூர் பகுதியில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். […]
கள்ளக்குறிச்சி கலவரம்..! யூடியூப் சேனல்களை முடக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like