கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி தலைமை அறிவித்தது இந்த நிலையில் நாளை முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரே சமயத்தில் 20,000 ரூபாய் வரையில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிதாக 1000 ரூபாய் நோட்டுகள் மறுபடியும் அறிமுகப்படுத்தப்படலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது இது தொடர்பாக பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருப்பதாவது, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக தற்போது எந்தவித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. இது போன்ற ஒரு திட்டம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.