முதலமைச்சர் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.
அடுத்த மாதம் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலாக இன்று மாலை வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50 சேர்த்து இன்று மாலைக்குள் மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தத் தேர்வில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை மொத்தம் 10 மாதத்திற்கு வழங்கப்படும்.